தமிழகத்தில் சமூக செயல்பாட்டாளராக பலரால் பார்க்கப்படும் முகிலன், மீது சில பாலியல் குற்றங்கள் இருந்தது. அதன் காரணமாகவே அவர் தலைமறைவாக இருப்பதாக தெரிவித்தனர். முகிலன் காணவில்லை என சில ஊடகங்கள் இதனை மிகப்பெரும் விஷயமாக காண்பிக்க ஆரம்பித்தது. இருப்பினும் முகிலன் எங்கே? என குரல் எழுப்பிய பொழுது தான் முகிலன் என்பவர் யார் என பலருக்கு கேள்வி எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரை ஆட்கொணர்வு மனுவில் கண்டுபிடித்து தர கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிபிசிஐடி மற்றும் காவல் துறையில் பல இடங்களில் அவரை தேடி வந்தனர். நேற்று திருப்பதியில் திருப்பதி ரயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் இவர் தமிழகத்தை சேர்ந்த முகிலன் என்பது தெரியவந்துள்ளது. ரயில் மூலம் காட்பாடி ரயில்வே நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், இந்நிலையில், பாடலாசிரியை தாமரை “சமூகப் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு திரியும் அனைத்து ஆண்களுமே பொம்பளப் பொறுக்கிகள் தான். பெண்ணை ஏமாற்றி விட்டு, விவகாரம் வெளியே வந்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டார். தற்போது வெளியே வந்திருக்கும் அன்னாரை, நீங்கள் வேண்டுமென்றால் மாலை போட்டு வரவேற்கலாம். ஆனால் எங்களிடம் இருந்து செருப்பு தான் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக தோழர் தியாகுவால் ஏமாற்றப்பட்டு, அவரை எதிர்த்து போராட்டம் செய்து வந்தார். இதன் காரணமாக தான் அவர், போராளிகளின் முகம் பற்றி தெரியாதா என்று கிழி கிழி என கிழித்துள்ளார் என பலரும் விமரிசித்து வருகின்றனர்.






