மான்செஸ்டர்: மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடைசி ஆறுதலுக்காக நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்குமே இதுவே இந்த உலகக்கோப்பையில் கடைசி ஆட்டம். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. லெவிஸ், ஹோப் மற்றும் பூரான் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
ஆஃப்கன் தரப்பில் சத்ரான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய ஆஃப்ன் அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ரஹ்மத் ஷா மற்றும் இக்ரம் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
மேற்கிந்திய அணியின் தரப்பில், ப்ராத்வெய்ட் 4 விக்கெட்டுகளையும், ரோச் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சில போட்டிகளில் வெற்றியின் அருகில் வந்தும், அனுபவமின்மையால் பல தவறுகளை செய்து, கடைசியில் ஒரு போட்டியைக்கூட வெல்லாமல், புள்ளிகள் எதையும் பெறாமல் நாடு திரும்புகிறது ஆஃப்கானிஸ்தான்.