நச்சு தாரில் தவறி விழுந்த நபர்: பல மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு…

ரஸ்யாவில் நச்சு தாரில் தவறி விழுந்த நபர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத நபர் அப்பகுதியில் கொட்டிக்கிடந்த தார் குவியல் ஒன்றில் தடுமாறி விழுந்துள்ளார்.

அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாத காரணத்தால் உதவி கேட்டபடியே அங்கு சத்தமிட்டுக்கொண்டிருந்துள்ளார்,

அப்பகுதி வழியாக சென்ற ஒருவர் சத்தம் வரும் பகுதியில் ஒரு நபர் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே மற்ற சிலருடன் சேர்ந்து அவரை பத்திரமாக வெளியில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு ரேசர்ஸ் மூலம் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், அவரால் நடக்க முடிகிறது எனவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பின்னர் அந்த பகுதியை சுத்தம் செய்வதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.