ஓசூர் அருகே உள்ள ஏரியில்.. பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!!

ஓசூர் அருகே பொறியாளர் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே உள்ள ஏரியில் நேற்று இளம்பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கும் சென்ற பொலிஸார், இளம்பெண்ணின் உடலை கைப்பற்றியபோது அதற்கு சற்று தொலைவில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்துள்ளது.

அதனையும் மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஆண் சடலத்தின் சட்டை பையில் ஒரு ஓட்டுனர் உரிமம் இருந்துள்ளது.

அதனை வைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, ஏரியில் பிணமாக கிடந்தவர், கண்ணன் (31) மற்றும் அவரது மனைவி கல்பனா (27) என்பது தெரியவந்தது. தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வரும் கண்ணனுக்கு சுமார் ரூ.15 லட்சம் வரை கடன் இருந்ததாகவும், அதனால் மனமுடைந்து காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

26-ஆம் திகதி தன்னுடைய தாயார் முத்தம்மாவிடம் போனில் பேசிய கண்ணன், கேரள மாநிலம் கொச்சிக்கு பணி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சேலத்தில் உள்ள நண்பரை பார்த்து விட்டு மனைவி, குழந்தையுடன் ஊருக்கு வருவதாக கூறியுள்ளார்.

அதன்பிறகு தான் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என பொலிஸார் சந்தேகித்துள்ளார். இதற்கிடையில் இருசக்கர வாகனம் மற்றும் குழந்தையின் காலனியை பொலிஸார் கண்டறிந்து சடலத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.