யாழ்.ஆறுகால்மடம் அரசடி ஞான வைரவா் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட முயற்சித்த திருடனை அப்பகுதி இளைஞா்கள் மடக்கி பிடித்த நிலையில், திருடடினிடம் இருந்த சில பொருட்கள் சந்தேகத்தை உண்டாக்கிய நிலையில் பொலிஸாாிடம் திருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆறுகால்மடம் அரசடி ஞான வைரவா் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட முயற்சித்த ஒருவா் அதனை உடைக்க முடியாததால், அருகில் உள்ள நாவலடி வைரவா் ஆலயத்தின் உண்டியலை உடைக்க முயற்சித்திருக்கின்றாா்.