கொல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்.. ஆபத்தான நிலையில் பிறந்த குழந்தை.!!

தெற்கு லண்டனில் உள்ள கிராய்டனில் 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கிராய்டனில் சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில், மரணத்துடன் போராடிய அந்த 26 வயது பெண்மணி குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆபத்து கட்டத்தை குழந்தை தாண்டவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் 37 வயதுடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். தொடர்புடைய சம்பவத்தில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருடன் பகிர்ந்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பகல் 3.30 மணியளவில் பொலிசாருக்கும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் மாரடைப்பு காரணமாக ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசாரும் மருத்துவ குழுவினரும், ரத்த வெள்ளத்தில் கிடக்கும் கர்ப்பிணிப் பெண் என அறிந்துள்ளனர்.

குறித்த பெண்மணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது.

இதனிடையே அவரது பிள்ளையை காப்பாற்ற மருத்துவ குழு முயற்சி மேற்கொண்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே குறித்த பெண்மணி மரணமடைந்ததாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.