தஞ்சாவூரை அடுத்த வல்லத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்பறையிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார். சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியைகளிடம் தெரிவித்தனர்.
அவரை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்ற ஆசிரியைகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் வல்லம் அரசு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியை சேர்ந்த ஐஐடி மாணவர் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாகவே அவர் கர்ப்பமடைந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் ஐடிஐ மாணவரை போக்சோ சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் காவல்துறையினர்.






