தமிழகத்தில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமினில் வெளிவந்திருக்கும் நிர்மலா தேவியின் சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் திகதி அருப்பு கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை சில பெரிய மனிதர்களுக்கு பாலியல் ரீதியாக படுக்கைக்கு அனுப்ப வற்புறுத்தி தொலைபேசியில் நிர்மலா தேவி பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியாகி வைரலானது.
அதன் பின் கல்லூரி மாணவிகள் கொடுத்த புகாரையடுத்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலா தேவியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது. மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, அதன் பின் ஜாமீனில் வெளிவந்தார்.
ஜாமீனில் வெளிவந்த போது, சாதரண சேலை, இரண்டு கட்டப் பையுடன் வெளியில் வந்தார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.
இந்நிலையில் ஜாமினில் வெளிவந்த நிர்மலா தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையின்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட் கிளையில் ஜூலை 1-ஆம் திகதி இந்த வழக்கில் உள்ள தடை ஆணை குறித்த விசாரணை வருகிறது என்று கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கை 08.07.2019-க்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் வழக்கு விசாரணையில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
அன்று சாதரண சேலை மற்றும் கட்டப்பையுடன் சென்ற நிர்மலா தேவி, நேற்று யார் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு முற்றிலும் ஆளே மாறிப் போய் சுடிதார், மல்லிக்கை பூ, கண்ணாடி இல்லாமல் வந்திருந்தார்.
இவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம், என்ன நடக்கும் என்ற கவலை கொஞ்சம் கூட அவரின் முகத்தில் தெரியவில்லை, மகிழ்ச்சியாக போன் பேசிக் கொண்டே செல்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி அந்த நிர்மலாதேவியா இது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.






