பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மக்களை தொலைக்காட்சி முன்னாடி அமரவைத்தது மறக்க முடியாது. இது தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்தது. இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தொடங்கியது. பிறகு கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.
தமிழ், தெலுங்கில் இந்நிகழ்ச்சி 2 வது சீசன் முடிந்துள்ளது. தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கியது. இதில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அகில் ஒருவரான பிரபல நடன அமைப்பாளர் சாண்டியும் கலந்துகொண்டு அனைவரிடமும் கலகலப்பாக பழகி வருகிறார்.
பிக்பாஸ் சீசன் 2 கலந்துகொண்டவர் சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் சாண்டியை பற்றி பதிவு செய்துள்ளார். அதில் , அவரின் நகைச்சுவை உணர்வை நேசிக்கிறேன். பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் அவராகவே இருக்கிறார் என்றும் பிக்பாஸில் சாண்டி நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்து, அங்க பார் அவர் கையத் தட்ட உண்டாச்சு உலகம் என்ற வீடியோவை பகிர்ந்துள்ளார்.






