தமிழகத்தில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போன்ற மராத்தியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இரண்டாவது சீசன் தற்போது தொடங்கிய நிலையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவரும் பிக்பாஸ் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
போட்டியாளர்களை ஒருவரான அபிஜித் பிசுகாலே என்பவர் திடீரென பிக் பாஸ் சூட்டிங் நடக்கும் வீட்டுக்குள் புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதை சக போட்டியாளர்கள் இது இது நாடகம் என்று நினைத்துக் கொண்டுயிருக்க, அபிஜித் பிசுகாலே காவல்துறையினரால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
2015 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் செக் மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர் அரசியல்வாதி மற்றும் கவிஞராகவும் இருந்துள்ளார். இதன் மராத்திய சின்னத்திரையின் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






