பிரம்மாண்ட பொன்னியின் செல்வன் படத்தை தொடங்கவிருக்கும் சினிமா பிரபலம்…

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் முதல் தற்போது உள்ள மணிரத்னம் வரை பலர் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட வாழ்க்கை வரலற்று கதையை இயக்க முயற்சித்து வருக்கின்றனர்.

இதற்கிடையில் ரஜினியின் கோச்சடையான், தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கிய சவுந்தர்யா ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் வரலாற்று கதையை வெப் சீரிசாக எடுக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த வெப் தொடரின் பணிகளை தற்போது தொடங்கியிருப்பதாக அவர் தனது இணையத்தில் தெரிவித்துள்ளார். அதோடு, அதுகுறித்து சில புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டுள்ள் சவுந்தர்யா, தொடர்ந்து பொன்னியின் செல்வன் தொடர் குறித்த அப்டேட்களை வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.