கம்புறுப்பிட்டி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாகவும் , இருப்பினும் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் கம்புறுப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கம்புறுப்பிட்டிய – பாளுவத்தஹேன – மாகதுரே பகுதியில் வீட்டின் படுக்கையறையில் 15 வயதுடைய மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றிருந்ததுடன், பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தாயார் வெளிநாட்டில் தொழில் புரிவதால் அந்த மாணவன் தனது தாயாரின் சகோதரங்களுடனேயே வசித்து வந்துள்ளார். அவருடைய தந்தை பிரிந்துவாழ்ந்து வருகின்றமையினாலேயே அந்த சிறுவன் அவர்களுடன் வசித்து வந்தார்.
இவ்வாறாக ஒரு சூழ்நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தற்கொலையின் பின்னணிக்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
மாணவனின் மரணத்தில் சந்தேகிக்கும் பொலிசார் மாறுபட்ட கோணங்களில் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அந்த மாணவன் சிறிய அளவில் மனநிலை பாதிப்புக்குள்ளாகியிருந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியந்திருக்கின்றது.