காதலனுடன் வாழ்வதற்காக வீட்டையும் நண்பர்களையும் பிரிந்து 120 மைல்கள் பயணம் செய்து சென்ற ஒரு பெண், அங்கு சென்றபோதுதான் காதலன் தனக்கு துரோகம் செய்கிறான் என்பதை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார்.
Blackpoolஇல் வாழ்ந்த Tilly Muzikம் Tomம் இசை விழா ஒன்றில் சந்தித்து காதலித்தபோது, ஒருநாள் தன்னுடன் வாழ வருமாறு Tillyயை அழைத்தார் அவரது காதலர்.
Isle of Man என்னும் இடத்தில் வசித்த Tom தன்னை அழைத்தபோது, அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என முதலில் தயங்கினாலும், பின்னர் அதே தீவில் மதுபான விடுதி நடத்திய Tillyயின் வளர்ப்புத் தந்தை அவருக்கு வேலை தர முன்வந்ததையடுத்து அங்கு குடிபெயர்ந்தார் Tilly.
அங்கு Tomஉடன் தொடங்கிய புது வாழ்வு இனிமையாக இருந்தாலும், அவ்வப்போது அவரது பழைய காதலியை பார்க்க நேரிட்டிருக்கிறது Tillyக்கு.
அப்போது மதுபான விடுதிக்கு வருபவர்களில் ஒருவர், அடிக்கடி Tom அவரது பழைய காதலியுடன் சுற்றுவதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர், Tom அவரது பழைய காதலிக்கு அனுப்பிய அந்தரங்கமான செய்திகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து Tillyக்கு காட்ட, அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Tilly, Tomஉடன் சண்டை போட, அவர் மன்னிப்பு கேட்க, பின்னர் ஆறு மாதங்கள் பிரிந்து வாழ்ந்திருக்கிறார்கள் இருவரும்.
பிரிவுக்கு பின் மீண்டும் ஒரு முடிவுக்கு வந்து, இருவரும் சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்தபோது மீண்டும் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அவருடன் பணியாற்றிய அவரது மேலாளர் ஒருவர், Tom தனது பழைய காதலியுடன் சுற்றுவது தெரியுமா என்று Tillyயிடம் கேட்க, இது எப்போது நடந்தது என்று அவர் விசாரிக்க, ஆறு மாதங்களுக்கு முன் என்று கூறியிருக்கிறார் அந்த பெண்.
அந்த நேரத்தில்தான் தாங்கள் இருவரும் சண்டை போட்டதும், தான் தனது பழைய காதலியை சந்திக்கவேயில்லை என்று கூறியதும் நினைவுக்கு வர, அப்படி நடக்க வாய்ப்பில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் Tilly.
என்றாலும் Tillyயின் மேலாளர் தொடர்ந்து உறுதியாக தான் அவர்களை இதே மதுபான விடுதியில் பார்த்ததாக அடித்துக் கூற, உதவிக்கு வந்தார் Tillyயின் சித்தப்பா.
அவரது அறிவுரையின்படி மதுபான விடுதியில் உள்ள CCTV கெமராக்களை ஆராய, ஒரு வீடியோவில், மறைவான ஒரு இடத்தில் Tomம் அவரது பழைய காதலியும் நெருக்கமாக இருக்கும் காட்சி ஒன்று பதிவாகியிருந்ததைக் கண்டு துவண்டு போனார்.
பிறகு Tomக்கு ஒரு பெரிய குட் பை சொல்லிவிட்டு அவரைப் பிரிந்த Tilly, இப்போது தனது புதிய காதலைக் கண்டு பிடித்திருக்கிறார்.
ஊருக்கு திரும்பிய Tillyக்கு, Shane என்னும் தன்னுடைய புதிய காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது.