தனியாக ஒருவரும் நாடு திரும்ப முடியாது! – பாகிஸ்தான் அணியின் கேப்டன்

உலகக்கிண்ணம் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் சரியாக விளையாடாவிட்டால் தனியாக ஒருவரும் நாடு திரும்ப முடியாது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற உலகக்கிண்ணம் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் துவங்கி, ரசிகர்கள் பலரும் அணியை கடுமையாக சாடி வருகின்றனர்.

இதுவரை விளையாடிய 5 போட்டியில் வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது. இதனால் எஞ்சியுள்ள 4 போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி போட்டியை நினைத்து பார்க்க முடியும்.

இந்த நிலையில் செய்தியர்களுக்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, தனியாக நாடு திரும்பலாம் என யாராவது நினைத்தால் அது முட்டாள்தனம். மோசமாக விளையாடியதை மறந்து எதிர்வரும் 4 போட்டிகளில் அணியை தூக்கி நிறுத்துவதில் கவனம் செலுத்துங்கள் என கூறியுள்ளார்.