அழகிய கம்மல்கள் உங்களது முகத்தை பிரகாசமாக அழகுடன் தோன்றச்செய்யும். கம்மல் போடும் ஓட்டைகளில் எண்ணெய்படுவதாலும், சில அழுக்குகள் சேர்வதாலும், ஒரு தூர்நாற்றம் இந்த இடத்தில் வீசும்.
இதனை நீங்கள் ஆன்டி பாக்டீரியல் சோப்புகளை கொண்டு சுத்தம் செய்ய முடியும்.
கம்மல்
கம்மல் அணியும் இடத்தில், துர்நாற்றத்துடன் அரிப்பு ஏற்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் கம்மல் மெட்டிரியல் உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது என்று அர்த்தமாகும்.
சிலருக்கு கவரிங் மெட்டிரியலால் செய்யப்பட்ட கம்மல்கள் அலர்ஜியை ஏற்படுத்தும். அவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
அழுக்கு கையால் வேண்டாம்
உங்களது கம்மல் அணியும் ஓட்டையை எப்போதும் அழுக்கான கையால் தொட வேண்டாம். நீங்கள் கதவுகள், பணம் போன்றவற்றை தொட்டு விட்டு உங்களது காதுகள் மற்றும் கண்களை தொடும் போது, கிருமிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவுகின்றன.
போர்வை
உங்களது போர்வைகளை சுத்தமாக, அடிக்கடி துவைத்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. பேட் ஷீட்களில் இருக்கும் அழுக்கானது, உங்களது சருமத்தை எளிதில் பாதிப்படைய செய்துவிடும்.
கெமிக்கல் வேண்டாம்
மிகவும் அதிக வலிமை உடைய கெமிக்கல்களை பயன்படுத்தி காது ஒட்டைகளை சுத்தம் செய்வது கூடாது. இது உங்களது காது பகுதியை எரிச்சலடைய செய்யும். அதிக கெமிக்கல்கள் இல்லாத சோப் அல்லாதவற்றை பயன்படுத்துவதே நல்லது