கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய பகுதியில் மர்ம நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அந்தப் பகுதியிலுள்ள வீடு ஒன்றின் மீது மோசமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவில் வீட்டிற்கு வந்த கும்பலினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்தப் பகுதியில் நடந்த மரண வீட்டிற்கு வந்த குழுவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என தாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வீட்டின் உரிமையாளரை தேடியே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தாக்கப்பட்ட வீட்டில் இருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.