சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் நபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்காவ் மண்டலத்தில் லென்ஸ்பர்க் நிலையத்திலேயே இச்சம்பவம் வெள்ளியன்று இரவு சுமார் 10 மணியளவில் நடந்தேறியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு அவசர அழைப்பு கிடைத்துள்ளது. உடனடியாக லென்ஸ்பர்க் நிலையம் சென்ற பொலிசார், அந்த நபர் அங்கிருந்து மாயமானது குறித்து அறிந்தனர்.
இருப்பினும் விசாரணையை முன்னெடுத்த பொலிசார், அந்த நபரின் அடையாளத்தை கண்டுபிடித்துள்ளனர்.
தொடர்ந்து அவரது குடியிருப்புக்கே சென்று அந்த 39 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் பொதுமக்களை துப்பாக்கி காட்டி மிரட்டியது தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.