பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸின் படிக்கட்டு உடைந்து பறிபோன உயிர்கள்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதியில் இன்று  முற்பகல் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற அரச பஸ் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் குறித்த பஸ் நடத்துனர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த பஸ் கால்வாய் மதில் மீது மோதுண்டுள்ளது. இதனை தொடர்ந்து பஸ்ஸின் முன் நுழைவாயில் உடைந்துள்ளதுடன் , அதில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் கடுகன்னாவை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கேகால்லை பகுதியைச் சேரந்த 53 வயதுடைய கல்லேல்லாகே எட்வின் குணதாச மற்றும் சம்மாந்துரை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ராமசாமி சேகர் எனப்படும் இருவரே உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.