தமிழ் சினிமாவுக்கான நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23 ல் சென்னையில் நடைபெறவுள்ளது. தற்போது பதவியிலிருக்கும் நாசர், விஷால், கருணாஸ், கார்த்தி அணியின் பதிவிக்காலம் முடிந்துவிட்டது. இவர்கள் அணியில் உறுப்பினர்களாக இருந்த பலர் தற்போது பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு வந்துள்ளனர்.
இதில் நடிகர் சங்க கட்டிடத்திற்காக கோடிகளில் நிதியுதவி அளித்து பல முயற்சிகள் எடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் செயலாளராக போட்டியிடுகிறார். இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் வைத்துள்ளனர்.
ஐசரி கணேஷ் கூறியதில் இந்த கட்டிடம் நின்றுவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. வேலைகள் நடக்கவில்லை. அதனால் நான் பதவிக்கு வந்தால் 6 அல்லது 8 மாதங்களில் கட்டிடத்தை முடித்து கொடுத்து விடுவேன். என் அப்பா மீது சத்தியம் என கூறினார்.
மேலும் அந்த கட்டிடத்திற்கு ரூ 5 கோடி கடன் உள்ளது. மேலும் கட்டிடம் முடிய ரூ 22 கோடி தேவைப்படுகிறது என கூறியுள்ளார். பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்த் போட்டியிடுகிறார்.
துணை தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி மற்றும் உதயா ஆகியோர் இருக்கிறார்களாம். மேலும் அவர்கள் எங்களுக்கு பின்னால் அரசியல் பின்புலம் இல்லை. எல்லோரின் நோக்கம் சங்க கட்டிடத்தை முடிக்க வேண்டும் என்பதே. பாண்டவர் அணிக்கு எப்போது முதல் மரியாதை உண்டு என கூறினார்கள்.
மேலும் குட்டி பத்மினி பேசும் போது விஷால் அணியில் இருப்பவர்களும் என் பிள்ளைகள் தான். எந்த காழ்ப்புணர்ச்சியோ எங்களுக்குள் இல்லை. நாங்கள் விஷாலுக்கு துரோகம் செய்யவில்லை. ஏதோ ஓர் மனவருத்தம் மட்டுமே தான் என கூறினார்.






