நண்பனை எரித்து கொலை செய்த அண்ணன்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலை அடுத்துள்ள காரியமாணிக்கபுரம் பகுதியில் சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் நேற்று அரைகுறையாக எறிந்த நிலையில் ஆண் நபரின் பிணம் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்., காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

அந்த விசாரணையில்., பிணத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செயப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கான காரணத்தை கண்டறிய இரண்டு தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கிய நிலையில்., சம்பவம் நடைபெற்ற நேரத்தில் கார் ஒன்று வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபர் யார்? என்பது குறித்த விசாரணையை காவல் துறையினர் தீவிரமாக மேற்கொள்ள துவங்கினர்.

அந்த விசாரணையில்., கார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் பகுதியை சார்ந்த ரேசி (வயது 33) என்பவருக்கு சொந்தமானது என்றும்., ரேசியை காண சென்ற காவல் துரையினருக்கு., அவர் தனது நண்பர்களை சந்திக்க சென்றுள்ளார் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாது அவர் வள்ளியூர் பகுதியில் ஸ்டுடியோ நடத்தி வரும் காரணத்தால்., தொழில் விசயத்திற்க்காக அடிக்கடி நாகர்கோவில் சென்று வருவதும் தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த காவல் துறையினர் ரேசியின் நண்பர்கள் குறித்து கேட்டறிந்த சமயத்தில்., கன்னியாகுமரி பகுதியில் இருக்கும் பெருமாள்புரம் பகுதியை சார்ந்த கேதீஸ்வரன் (வயது 24) என்பது தெரியவந்தது. இதனையடுத்து கேதீஸ்வரனை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து., ரேசியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இது குறித்த விசாரணையில்., ஸ்டுடியோ அதிபரான ரேசி இலங்கை அகதி. முதலில் திருநெல்வேலியில் இருக்கும் இலங்கை அகதி முகாமில் தங்கியிருந்த ரெசிக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ள நிலையில்., இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டால் அவர் பிரிந்து சென்றார். இதற்கு பின்னர் வள்ளியூரில் உள்ள பகுதியில் ஸ்டுடியோ ஒன்று துவங்கிய நிலையில்., இருவரும் இலங்கை அகதி என்பதால் பழக்கம் ஏற்பட்டு ஏதேனும் உதவிகள் கூறுவார்.

அவரின் பணிக்கு நானும் சென்று வந்த நிலையில் எங்களின் நட்பு அதிகரித்து எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். இந்த சமயத்தில்., எனது சகோதரிக்கும் – ரெசிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு., இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., இந்த தகவல் எனது அக்கம் பக்கத்து நபர்களின் மூலமாக கிடைக்கப்பெற்றது.

இதனையடுத்து இருவரையும் எச்சரித்த நான்., தவறான பழக்கத்தை கைவிட கூறி கூறினேன். இருவரும் எனது பேச்சை கேட்காமல் உல்லாசம் அனுபவித்த நிலையில் இருந்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நான்., அவரை கொலை செய்ய திட்டமிட்டு நாகர்கோவிலுக்கு வர சொன்னேன்.

இருவரும் காரில் மது அருந்தி பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் நான் கொலை செய்து., எனது நண்பர்களின் உதவியுடன் பிணத்தை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று எரித்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துரையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.