கெக்கிராவையில் பதற்றம்! பொலிஸார் குவிப்பு!

கெக்கிராவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து கெக்கிராவை – திப்பட்டுவாவ பகுதியில் ஏ-9 வீதியை வழிமறித்து பிரதேசவாசிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.