பிரபல நாயகிக்கு 44 வயதில் இரண்டாவது திருமணம்!

1980ம் ஆண்டு கன்னட திரையுலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் சுமன் ரங்கநாதன்.

இவர் சினிமாவில் ஜெயித்த பிறகு தயாரிப்பாளர் வாலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார், பின் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு 44 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய முன் வந்துள்ளார் சுமன். தொழில் அதிபர் சஜன் சின்னப்பா என்பவரை 2வது திருமணம் செய்ய இருக்கிறார்.