மீண்டும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாரான ஆளும் கட்சி.!!

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி எப்போது கவிழும் என்று தெரியாமல் பதற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ஆளும் கூட்டணியை சார்ந்தவர்கள் சிலர் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்று பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வர வாய்ப்புள்ளதாக நிகில் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு தேர்தல் வருமா அல்லது இந்த ஆண்டு தேர்தல் வருமா என்பது குறித்தெல்லாம் எனக்கு தெரியாது தேர்தலுக்கு இப்போதிலிருந்தே தொண்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நிதிஷ் குமாரின் மறைமுக பேச்சு மாநில அரசியலில் புதிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.