2019 உலக கிண்ண தொடரில் இங்கிலாந்தை தோற்கடித்த பாக்கிஸ்தான் அணியின் தலைவர் சவ்பிராஸ் அகமட்டிற்கு சமூக ஊடகங்களில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன
பயிற்சிப்போட்டிகளிலும்முதல் போட்டிகளிலும் தோல்வியடைந்த பின்னர் அதிலிருந்து மீண்டும் மகத்தான வெற்றியை பெற்றுள்ள பாக்கிஸ்தான் அணிக்கு எனது வாழ்த்துக்கள் என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
உங்களிடம் திறமையுள்ளது உங்களால் கிண்ணத்தை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையே அவசியம் என இம்ரான்கான் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்யை தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிய பாக்கிஸ்தானின் மற்றுமொரு ஜாம்பவானான வசிம் அக்ரம் தனது பிறந்தநாளிற்கு கிடைத்த சிறந்த பரிசு பாக்கிஸ்தான் அணியின் வெற்றி என தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தான் அணித்தலைவரால் உலக பொருளாதாரத்தினை நிலையையே மாற்றியமைக்க முடியும் என டுவிட்டரில் தெரிவித்துள்ள மேற்கி;ந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இயன் பிசப் தெரிவித்துள்ளார்.
அவரிடம் எவ்வளவு தன்னம்பிக்கை,மனவலிமை ஆகியன காணப்படுகின்றன என பிசப் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.
பாக்கிஸ்தான் அணி வெளிப்படுத்திய மனோநிலையை பாராட்டியுள்ள அவுஸ்திரேலியஅணியின் முன்னாள் வீரரான டீன் ஜோன்ஸ் ஒருநாள் கிரிக்கெட இறந்துவிட்டது என யார் தெரிவித்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.