முற்றிலும் முடங்கிய செயல்பாடு : முடுக்கி விடப்படும் பணிகள்.!

பா.ஜ.க இணையதளம் ஹேக் செய்யப்பட்டு அதில் மாட்டிறைச்சி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பிரதமர் தலைமையில் இரண்டாவது முறையாக பா.ஜ.க கூட்டணி அரசு நேற்று மத்தியில் பதவியேற்றது.

இதற்கிடையே பா.ஜ.க கட்சியின் டெல்லி பிராந்திய இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேடலுக்கு முன்னாலும் பீப் என்ற வாரத்தை இடம்பெற்று இருந்தது.

மேலும் இணையதள தகவல்களை முற்றிலுமாக மாற்றிய ஹேக்கர்கள் Bharatiya Janata Party என்பதை Beef Janata Party என மாற்றியுள்ளனர்.

இணையதள பக்கம் ஒவ்வொன்றிலும் மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என அனைத்து பக்கங்களையும் மாற்றியுள்ளனர். இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படத்தால் நிரம்பியுள்ளது.

இதனையடுத்து இணையதளத்தை சரிசெய்யும் பணியை பா.ஜ.க மேற்கொண்டது. ஒருவழியாக நிலை சீரடைந்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.