திருவண்ணாமலை பகுதியில் போலி மருத்துவர் கருக்கலைப்பில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இரகசிய தகவலானது கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர்., திருவண்ணாமலை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட சமயத்தில்., அங்குள்ள ஈசான்யலிங்கம் பகுதியில் இருக்கும் பேன்சி கடையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகத்தை தீர்ப்பதற்கு காவல் துறையினர் சோதனை மேற்கொண்ட சமயத்தில்., கடையின் உரிமையாளர் கவிதா (வயது 32) என்ற பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., அவர்களுக்கு சந்தேகம் ஏற்படவே., கடையில் இருந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில்., அவர் கருக்கலைப்பிற்கு வந்தது தெரியவந்தது.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில்., பேன்சி கடையின் பின் பகுதியில் மருத்துவ உபகரணங்கள்., கருக்கலைப்பிற்கு தேவையான மருந்துகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து பேன்சி கடைக்கு அதிரடியாக காவல் துறையினர் சீல் வைத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த தகவல் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
இதனையடுத்து இது குறித்த தீவிர விசாரணையில்., கடையின் முன் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவை சோதனை செய்த காவல் துறையினர்., நாளொன்றுக்கு சுமார் இரண்டு முதல் மூன்று பெண்கள் வீதம் கருக்கலைப்பிற்கு வந்து சென்றுள்ளனர் என்றும்., கடந்த 10 வருடங்களில் இந்த துயரம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது என்றும்., பெரும்பாலும் திருமணம் ஆகாத இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் வந்து சென்றதும் தெரியவந்துள்ளது.
இவர்களின் கருக்கலைப்பு செய்த பெண்களின் ரிப்போர்ட் மற்றும் பெண்குழந்தை என்று அறிந்து கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்துள்ளது. சுமார் 4000 க்கும் மேற்பட்ட கருக்கொலைகள் இங்கு வைத்து நடைபெற்றுள்ளதையும்., ரிப்போர்ட்டில் இருந்த அலைபேசி எண்கள் மூலமாக பல விபரங்களை காவல் துறையினர் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.
இந்த கருக்கொலை மையத்திற்கு இடைத்தரகர்கள் மூலமாக பல்வேறு மாவட்டங்களை சார்ந்த இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கருக்கலைப்பு செய்ததும்., இவர்களை இடைத்தரகர் அழைத்து வந்து நபருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூல் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த தகவலின் மூலமாக இவர்களுக்கு பிற நபர்களுடன் தொடர்பு உள்ளதா? இதற்கு பின்னணியில் செயல்படும் கும்பல் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.