மோடியை தோற்கடித்த நேசமணி?

மக்களவை தேர்தலில் 352 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றிபெற்ற பாஜக இன்று இரவு 7 மணிக்கு பதவியேறப்பு விழா நடைபெறவுள்ளது. இதனால், டுவிட்டரில், மோடியின் பதவியேற்பு விழா தான் இந்திய அளவில் டிரெண்டாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மோடி பதவியேற்பு விழாவை பின்னுக்கு தள்ளி இந்திய அளவில் pray for nesamani ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. வைகை புயல் வடிவேல் கதாபாத்திரத்தை குறிப்பிடும், pray for nesamani என்ற ஹேஷ்டேக் திடீரென உலக அளவில் முதல் இடத்தில் டிரெண்டாக தொடங்கியது.

தற்போது வரை pray for nesamani ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகி வருகிறது, மோடியின் பதவியேற்பு விழாவை குறிப்பிடும் மோடி சர்கார் 2 என்ற ஹேஷ்டேக், மூன்றாவது இடத்திலே டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில், இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஹேஷ்டேக் டிரெண்டாகிறது.