இலங்கையில் அமுலிருந்த தற்காலிக வெடிபொருள் விநியோகத் தடை இன்று தளர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையை அடுத்து வெடிபொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது ஏற்பட்டுள்ள சுமுக நிலையை அடுத்து தற்காலிக தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் தேவையான வெடிபொருட்களை மாவட்ட செயலாளரின் அனுமதியுடன் பெற்றுக்கொள்ள முடியும்.
கற்குழிகள் மற்றும் அகழ்வு நடவடிக்கைகளுக்கு தேவையான வெடி பொருட்களை குறித்த மாவட்ட செயலாளர்கள் ஊடாக பெற்று கொள்ள முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை விடுத்து, இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.