இவ்வுலகில் பிறந்த அனைவரும் வளர்ந்து திருமணம் செய்துகொள்ள வேண்டிய தருணம் வரும். அவ்வாறு நடைபெறும் திருமணத்திற்கும்., வருங்கால கணவரை தேர்ந்தெடுக்கும் பெண்கள் அவர்களின் மனதை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று என்னவார்கள். சில நேரத்தில் நடைபெறும் திருமணம் நம்மை பெரும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கும்.
அயர்லாந்து நாட்டை சார்ந்த பெண்மணியின் பெயர் அமண்டா. இவர் கடந்த 2016 ம் வருடத்தில்., கிபி 1700 ம் வருடம் நடைபெற்ற சம்பவத்தை பற்றி ஆராய்ந்து., அதனை பற்றி எழுத துவங்கியுள்ளார். அந்த நேரத்தில் தன்னை சுற்றி நடந்து வரும் மாற்றத்தையும்., அமானுஷ்யத்தையும் உணர்ந்துள்ளார். அந்த அமானுஷயத்துடன் தொடர்பு கொண்ட அவர் பேச துவங்கியுள்ளார்.
அந்த நேரத்தில்., பதில் தெரிவித்த அமானுஷ்ய சக்தி தனது பெயர் ஜாக் என்றும்., தாம் கடந்த 300 வருடங்களுக்கு முன்னதாக வாழ்ந்து வந்தேன் என்றும்., எனது பணி கடற்கொள்ளையன் என்றும் தெரிவித்துள்ளது. இதனுடன் பேச துவங்கிய அமண்டா., ஒரு சமயத்திற்கு மேலாக காதல் வலையில் விழுந்து., அதனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நேரத்தில்., நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் தெரிவித்தாவது., நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ துவங்கிய நேரத்தில்., அவரின் மற்றொரு முகமானது வெளிவந்தது. அவர் எனது உடலுக்குள் புகுந்து என்னை ஆட்டுவித்தார். இதனால் அதிர்ச்சியான நான் அவரை பேயை விரட்டும் நபர்களின் மூலமாக விரட்டி பிரிந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இவர் கூறியதை வைத்து நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் சமயத்தில்., கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக வெளியான ஹாலிவுட் திரைப்படமான “பைரேட்ஸ் ஆப் கரிபியன்” கதை உண்மை ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும்., அதில் உள்ள கதாபாத்திரத்தின் பெயரில் உண்மையாகவே ஒரு நபர் இருந்துள்ளாரோ? என்ற சந்தேகமும் எழுகிறது.






