கடந்த சில மாதங்களாகவே பயங்கரவாதிகளின் அட்டூழியமானது அதிகரித்துக்கொண்டு வருகிறது. இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பின் காரணமாக மக்கள் கடுமையான அவதியுற்றனர்., பல மக்கள் பரிதாபமாக தங்களின் உயிரை இழந்துள்ளனர்.
இந்த நிலையில்., நேற்று நேபாளம் நாட்டில் உள்ள மூன்று பகுதியில் திடீரென குண்டுகள் வெடித்தது. திடீரென நிகழ்ந்த வெவ்வேறு குண்டு வெடிப்பின் காரணமாக நான்கு மக்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சுமார் 7 பேர் பயங்கர காயங்களுடன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு., தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணி துளிகளிலேயே அங்குள்ள பகுதிகள் அனைத்திலும் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக 9 நபர்கள் காவல் துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ணியில்., இது தொடர்பான விசாரணையை காவல் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு தற்போது வரை எந்த விதமான பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்தின் காரணமாக அங்குள்ள பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.






