திருமணமான 9 மாதத்தில் மனைவி தற்கொலை!

திருவள்ளுர் அருகே காதலித்தது திருமணம் செய்த இளம்பெண், 9 மாதத்திலே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிசோர், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த மாலினி என்கிற இளம்பெண்ண்னை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தனிக்குடித்தனம் செல்ல முடிவெடுத்த இருவரும், திருவள்ளுர் அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாலினி, வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், வரதட்சணை கொடுமை தற்கொலைக்கான காரணமாக இருக்குமா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.