உலக கோப்பையில் கீப்பரில் இருந்து தூக்கப்பட்ட தல தோனி!!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடந்த 1975 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 12-வது உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 10 அணிகளும், பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து, இந்திய அணி பந்து வீசிய நிலையில், தோனி சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

இதனால் தோனிக்கு பதிலாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் செயல்பட்டார். பின்னர், களமிறங்கிய தோனி எல்லைக்கோட்டிற்கு அருகே பீல்டிங் செய்தார்.

இதுவரை தல தோனியை அணித்தலைராகவும், அதிரடி மட்டையாளராகவும், விக்கெட் கீப்பராகவும் பார்த்து வந்த ரசிகர்களுக்கு இது அரிதான காட்சியாக அமைந்தது. பல ஆண்டுகளுக்கு பின்னர், சர்வதேச போட்டியில் தல தோனி மீண்டும் பீல்டிங் செய்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.