பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் 100 நாட்கள், முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்ட வீட்டிற்குள் எவ்வித வெளி உலக தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே போட்டியின் கண்டிஷன். இதனை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார்.
இதில் முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசனுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மேலும் பிக்பாஸ் முதல் சீசன் ரசிகர்களால் பெருமளவில் வரவேற்கப்பட்டது. ஆனால் இரண்டாவது சீசன் பல எதிர்மறையான விமர்சனங்களை பெற்று, எதிர்பார்த்த அளவிற்கான வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் தற்பொழுது பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கஉள்ளது.இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமலே தொகுத்து வழங்க உள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சீசனில் பங்குபெற உள்ள தாக போட்டியாளர்கள் குறித்த சில விவரங்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஓவியா நடிப்பில் வெளியான படம் 90 எம்எல்.இப்படம் மிகவும் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தங்கள் இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளிவந்த நிலையில் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ரீ கோபிகா பிரபல தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அவர் எத்தகைய தகவலையும் வெளியிடவில்லை.