மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பு!!

தமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என மாபெரும் நடிகர்களுடன் நடித்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் அன்று முதல் இன்று வரை இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்த இவர் நடிகரும் ,திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். அதனை தொடர்ந்து தற்போது சின்னத்திரை தொடரில் நடித்து வருகிறார்.மேலும் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தேர்தல் முடிவு அன்று நடிகை குஷ்பு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பர் என எதிர்பார்த்து வந்த நிலையில் குஷ்பு தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது டிவி விவாதங்களில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.