சூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.!

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் என்.ஜி.கே. இப்படம் வருகிற மே 31ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யா டுவிட்டரில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா டுவிட்டரில் சூர்யாவிடம் கேள்வி கேட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார்? என்று சுரேஷ் ரெய்னா கேட்டார். அதற்கு நடிகர் சூர்யா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை பிடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் சுரேஷ் ரெய்னா கேள்வி கேட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியாக எனக்கு உங்கள் இருவரையும் பிடிக்கும் என்று சூர்யா கூறியுள்ளார்.