கர்நாடகாவில் 78 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான பெரும்பான்மை இல்லதாதல், 37 இடங்களில் வெற்றிப்பெற்ற மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் குமாரசாமியை முதல்வராக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு அரசாக கர்நாடக அரசு நகர்ந்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி நிர்வாகிகள் இடையே உள்ள கருத்து வேறுபாட்டால் ஏற்கனவே கர்நாடக அரசு நிர்வாக ரீதியாக பல சிக்கலை சந்தித்து வருகிறது.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவின் தகுதிக்கேற்ற பதவிகள் அவருக்கு வழங்கப்படவில்லை என்ற குமாரசாமி கருத்து தெரிவித்தார், குமாரசாமியின் இந்த கருத்து கூட்டணிக்குள் பெரும் சர்ச்சையை கிளப்பியது, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வரும் சித்தராமையாவை முதல்வராக்க வேண்டும் என்ற குரல் காங்கிரஸில் இருந்து எழும் போது குமாரசாமியின் இந்த கருத்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது
இதனையடுத்து, இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சித்தராமையா, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளத்தில் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள் பலர் உள்ளனர், அதில் குமராசாமியின் சகோதரர் ரெவண்ணாவும் ஒருவர் என குறிப்பிட்டது மேலும் பெரும் சர்ச்சையை அதிகப்படுத்தி உள்ளது.
தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இடையே நடக்கும் இந்த வார்த்தை போர், குமாரசாமியின் முதல்வர் பதவியை கேள்விக்குறியாக்கி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மாநிலக் கட்சிகளோடு கூட்டணி வைக்கும் முடிவில் காங்கிரசின் டெல்லி தலைமை இருக்கும் போது கர்நாடக குழப்பம் கர்நாடக அரசியலோடு முடியுமா அல்லது அதனைத் தாண்டி தேசிய அரசியலில் எதிரொலிக்குமா என்பதே முக்கியமான கேள்வியாக இருக்கிறது.