மீண்டும் முழு பார்ம்க்கு திரும்பிய ஸ்டாலின்! வைரலாகும் வீடியோ!

நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தினை செய்துகொண்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலின், மக்களிடையே நன்மதிப்பைப் பெற புள்ளி விவரத்துடன் கூடிய ஒரு கணக்கினை தெரிவித்தார். அதனைக் கேட்ட மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என அனைவருமே அதிர்ச்சி அடைந்து, வாயடைத்து போனார்கள்.

ஒரு அரசியல்வாதி பேசுவதை, மக்கள் சந்தேகப்படாதவாறு தெளிவாக பேச வேண்டும் அல்லது பேசுவதை சரியாக குழப்பமில்லாமல் பேசிவிட வேண்டும். ஆனால் இதில் எதிலுமே திமுக தலைவர் ஸ்டாலின் சரிப்பட்டு வரவில்லை. அவருக்கு எழுதிக் கொடுத்தாலும் பார்த்துப் படிக்க வரவில்லை, மனப்பாடம் செய்து கொண்டு சென்றாலும் உளறி விடுகிறார் என திமுகவினரே குமுறுகின்றனர்.

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்தது முதலே பல இடங்களில், பல கூட்டங்களில் அவர் உளறாத கூட்டங்களே இல்லை என்ற நிலை இருந்து வந்தது. இருந்தாலும் 70 வருட பாரம்பரியமிக்க கட்சியின் தலைவர், 23 வருடங்கள் ஆட்சியில் இருந்த கட்சி என்பதால் நிரந்தர தொண்டர்கள் இருப்பதால் அந்த தொண்டர்கள் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவர் என்னதான் உளறினாலும் அதையும் ஏற்றுக் கொள்ளும் தொண்டர்கள் அக்கட்சியில் இருக்கிறார்கள்.

ஆனால் அன்று நாமக்கல் கூட்டத்தில் அவர் உளறியது அரசியல் தெரிந்த அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏனெனில் அவரது கட்சியின் சார்பில் தற்போது சட்ட சபையில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 88 கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணி மொத்தம் 98 இடங்களைக் கைப்பற்றியது. அதிமுக கூட்டணி 136 இடங்களை கைப்பற்றியது. 98 இடங்களில் 89 இடங்களில் திமுகவும், 8 இடங்களில் காங்கிரசும், ஒரு இடத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் கைப்பற்றினார்கள். இதில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மறைந்து விட, திமுகவின் பலமாக சட்டசபையில் 88 உள்ளது.

நாமக்கல் கூட்டத்திலேயே புள்ளிவிவரத்துடன் பேசிய ஸ்டாலின், தன்னை அறிவார்ந்த மனிதன் என்று நினைப்பார்கள் என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ புள்ளிவிவரங்களை அடுக்க ஆரம்பித்தார். ஆனால் ஆரம்பமே சறுக்கல்தான் 234 சட்ட மன்றங்கள் இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்திலேயே ஒரு சட்டமன்றம் தான். 234 சட்டமன்ற தொகுதிகள் தான் இருக்கிறது என்பதை அவருக்கு முதலில் தெரியப்படுத்த வேண்டும்.

இதனை அடுத்துப் பார்த்தால் தமிழகத்திலே ஆட்சி அமைக்க மொத்தம் 118 தொகுதிகள் வேண்டும் என்றார் இது சரியான ஒரு கணக்குதான். அதன்பிறகு அவர் ஒரு கணக்கு சொன்னார். அந்த கணக்கு கேட்ட திமுக உறுப்பினர்களுக்கு தான் மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது. ஏனெனில் அவர் தற்போது சட்ட சபையில் இருக்கும் திமுக கூட்டணியின் பலத்தின் கணக்கினை கூறினார். அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் 87 இடங்களையும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும் மற்றொரு கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்தையும் ஆக மொத்தம் 107 இடங்களையும் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

இதனைக் கேட்ட உடன்பிறப்புகளுக்கு தான் மண்டையை எங்கயாவது முட்டி மோதிக் கொள்ளலாமோ என்று இருந்தது. ஏனெனில் தமிழக சட்டசபையில் திமுக கூட்டணிக்கு இருக்கும் பலம் என்பது 97 என்பதாகும். இதனை விட கொடுமை என்னவென்றால் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருக்கும், இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் கட்சியின் தலைவர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அவருடைய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தெரியாமல் இருப்பதுதான் உளறலின் உச்ச பட்சமாக போனது. ஏனெனில் தற்போது தமிழக சட்டசபையில் திமுகவின் பலம் 88. ஆனால் அவர் கூறியது 87 இவ்வாறு இருக்க தன்னுடைய கட்சியின் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை கூடத் தெரியவில்லையே என உடன்பிறப்புகள் மண்டையை பிய்த்து கொள்ளாதது ஒன்றுதான் குறை. இருந்தாலும் வேறு வழியில்லாமல் அவரையும் ஆதரிக்க வேண்டிய இடத்தில் தான் அவர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் மக்களவை பொதுத்தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தல் முடிந்து தற்போது 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அரவக்குறிச்சியில் போட்டியிடும் செந்தில் பாலாஜியை ஆதரித்து புள்ளிவிவரம் ஒன்றினை அள்ளி வீசினார் ஸ்டாலின். அதனை கேட்ட மக்கள் கூச்சலும் குழப்பமுமாக மயங்கி போனார்கள்.

பிரச்சாரத்தின் போது தமிழக சட்டசபையில் திமுக கூட்டணிக்கு இருக்கும் பலம் குறித்து கணக்குகளை அள்ளிவிட்டார். அப்போது திமுகவிற்கு 86 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடங்கள் இருப்பதாகவும் ஆக மொத்தம் 9 இடங்களை கூட்டும்போது மொத்தம் எத்தனை இடங்கள்? என மக்களை நோக்கி அவர் கேள்வி எழுப்ப, அங்கிருந்து திமுக தொண்டர்களும் திமுகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 88 என்று சொல்ல, மக்களை பார்த்த ஸ்டாலின் என்ன தவறாக கணக்கு போடுகிறீர்கள்? என்று கணக்கினை திருத்தி 86 + 9 = 97 என கூறினார். இதனைக் கேட்ட திமுகவினருக்கு ஒருகணம் மயக்கமே வந்து இருக்கும். ஏனெனில் திமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 88 ஆனால் ஸ்டாலின் கூறியது 86 ஏற்கனவே கடந்த முறை பிரச்சாரத்தின்போது நாமக்கல்லில் 87 திமுக உறுப்பினர்கள் என்று கூறிய அவர் தற்போது 86 ஆக மாற்றிக் கொண்டுள்ளார்.

தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருக்கும், இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் கட்சியின் தலைவர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அவருடைய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையே தெரியாமல் இருப்பதுதான் உளறலின் உச்ச பட்சமாக போனது.

பிரச்சாரம் ஆரம்பித்தது முதல் முக ஸ்டாலின், தனக்கு என்ன வருமோ அதை அவர் சரியாக செய்து இருந்தால் கூட அவர் மக்களை கவர்ந்து இருப்பார். மேலும் அவர் திட்டங்களை கூறியிருந்தால் கூட, மக்களை கவர்ந்து இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கூட்டங்களிலும் தனக்கு வராத புள்ளிவிவரங்களையும், பேசத்தெரியாத திட்டங்களையும் தவறாக பேசி, சூழ்நிலைக்கு ஏற்ற மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட நினைத்து அதிலும் சொதப்பி வருகிறார்.

அறிஞர் அண்ணாவின் பேச்சில் வளர்ந்த கட்சி, ஸ்டாலின் பேச்சினால் சரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் திமுகவினர் உள்ளனர்.