இந்த உலகில் பெண்களுக்கு எதிரான தொடர் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது., அவர்களுக்கு நடைபெற்று வரும் அநீதிகள் அவர்களை சிந்திக்க விடாத அளவிற்கு பல மூளைச் சலவையின் காரணமாகவும் நடைபெற்று வருகிறது. கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பணத்தாசை காட்டி இணையம் மூலமாக விபச்சாரம் செய்யும் கும்பல் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எப்படியாவது படித்து முன்னேறி விட வேண்டும்., வீட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பெண்கள் படித்து வரும் நிலையில்., அவர்களின் ஆடம்பர வாழ்க்கையை அறிந்து கொண்ட இந்த கும்பல் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகளை குறிவைத்து இந்த செயலை அரங்கேற்றியுள்ளது.
முதலில் சிறு தேவைக்காக பணம் வழங்கி அவர்களுக்கு பணத்தாசை காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். குறித்த கும்பல் அவர்களிடம் ஒரு மணி நேர வேலைதான் என்று பணத்தை வழங்கி அவர்களிடம் பேசி., அவர்களை மூளைச் சலவை செய்து பணத்தாசை காட்டி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
பிரத்தியேகமாக இணையதளம் ஒன்றை துவக்கி., அதன் மூலமாக பல கல்லூரி மாணவிகள் வாழ்க்கை தொடர்ந்து சீரழிந்து வருகிறது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் மும்பை காவல் துறையினருக்கு ரகசியமாக கிடைத்துள்ளது. இது குறித்த விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர்., காத்திருந்து விபச்சார இணையதள கும்பலை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்., இணையம் மூலமாக விபச்சாரத்திற்கு விரும்பும் நபர்களின் அலைபேசி எண்ணை இவர்களின் இணையத்தில் பதிவு செய்ய கூறி., பின்னர் அவர்களின் வாட்சப் எண்ணிற்கு பெண்களின் புகைப்படத்தை காட்டி., அவர்களுக்கு ஏற்றார் போல் விலையும் கேட்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த விலைக்கு ஒப்புக் கொள்ளும் வாடிக்கையாளரை., குறித்த இடத்திற்கு அழைத்து அவர்கள் தேர்வு செய்த பெண்ணை விபச்சாரிகள் அழைத்துச் சென்று., தனியார் தங்கும் விடுதியில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
தனியார் விடுதிகளில் நடைபெறும் இந்த விபச்சாரம் தற்போது வெளிவந்துள்ள நிலையில்., இந்த விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் கல்லூரி மாணவிகள் என்பதும்., மாணவிகளுக்கு பணத்தாசை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்துள்ளது. இந்த கும்பலானது மும்பை மட்டுமல்லாது சென்னை மற்றும் கல்கத்தா போன்ற பல மாநிலத்திலும்., இணையம் மூலமாக பல மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.






