வவுனியா தர்மலிங்கம் வீதியில் கணவனுடன் சென்ற குடும்பப்பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா, தர்மலிங்கம் வீதியில் கணவனுடன் நடந்து சென்ற குடும்பப்பெண்னிடம் அப்பகுதியிலுள்ள வியாபார நிலையத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் கணவனுடன் சென்ற பெண் நடந்தவற்றை கணவனுக்குத் தெரியப்படுத்தி குறித்த இளைஞனையும் அடையாளம் காட்டியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாரைக் கண்டதும் இளைஞன் தப்பிக்க முயற்சித்துள்ளார் பொலிஸார் இளைஞனை மடக்கிப்பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் ஒன்றிணையத் தொடங்கியுள்ளதையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞனை தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






