இதை செய்தால் இதய நோய், சர்க்கரை நோய் வரும்.. ஜாக்கிரதையா இருங்க..!

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும், குறிப்பிட நேரங்களில் அதற்கான அதிகப்படியான சக்தியோடு இயங்கும். ஆகவே, அந்தந்த உறுப்பிற்கான நேரத்தை அதற்குத் தர வேண்டும். உதாரணத்திற்குக் காலை 5 மணியிலிருந்து 7 மணி வரைக்கும் நுரையீரலுக்கான நேரம்.

அப்போது மூச்சு பயிற்சி மேற்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியமானதாக இருக்கும். 7 மணியிலிருந்து 9 மணி வரைக்கும் இரைப்பைக்கான நேரம். அதனால் அந்த நேரத்தைத் தவறவிடாமல் சாப்பிட்டு விட வேண்டும். அப்படிச் செய்தால் செரிமான கோளாறு இருக்காது.

நாம் உணவு உண்ணும் நேரத்தை வைத்துத் தான் நம் தூக்கம், ஹார்மோன் இயக்கங்கள் மற்றும் உடல் இயக்கங்கள் அனைத்தும் சீராக இருக்கும். சாப்பிடும் நேரம் மாறுபடும்போது உடல் இயக்கங்களும் மாறுபடும்.

சிலர் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பார்கள். அவர்களுக்கு வழக்கத்துக்கு மாறான உடல் உபாதைகள் ஏற்படும். அவ்வாறு நேரம் தவறிச் சாப்பிடும் போது, இன்சுலின் சுரப்பில் சீரற்ற தன்மை ஏற்பட்டு நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இருதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை ஒழுங்கற்ற உணவுப் பழக்கத்தால் தான் ஏற்படுகிறது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சரியான நேரத்தில் சரியான உணவைச் சாப்பிட்டு வந்தாலே போதும் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.