கமலின் சர்ச்சை பேச்சு, பிரதமர் கொடுத்த பதிலடி!

அரவக்குறிச்சி தொகுதிக்குயில் பள்ளப்பட்டி என்ற பகுதியில் இஸ்லாமியர்கள் நிறைந்த கூட்டத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்துக்கள் குறித்து கமல் பேசியது பெரும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரச்சாரத்தின் போது சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

இந்தநிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், அப்பொழுது எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது, ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என கமல்ஹாசன் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், தீவிரவாதத்திற்கு என்று எந்த மதமும் கிடையாது, பிரதமரின் கருத்து மிகச் சரியானது என கூறியுள்ளார்.