சிலாபத்தில் நபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் இனங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வை உள்ளடக்கி அமைதிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் முக நூலில் பதிவுகளை இட்டுவந்ததாக பொலிஸாரால் கூறப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை இலங்கையில் நடந்த தொடர் குண்டுத் தாக்குதல்களின்பின்னர் சமூக வலைத்தளப் பாவனையாளர்கள்சிலர் விரும்பத்தகாத பதிவுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.