செல்போனில் பேசிய மாணவிக்கு நடத்த கொடூர சம்பவம் ?

சென்னை அயனாவரத்தில் வடக்கு மாட வீதியில் ராம் என்பவர் தனது குடும்பத்தினர் உடன் வசித்து வருகிறார்

அவரது மகள் தீபிகா வயது (16) அவர் நேற்று இரவு தனது வீட்டு மாடியில் நின்று கொண்டு செல்போனில் தனது நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்துள்ளார், அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த மாணவி தலையில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து காயமயடைந்த மாணவியை அவரது பெற்றோர்கள் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவி விழுந்த இடத்தை பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்

இதனையடுத்து அயனாவரம் K2 காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்போனில் பேசிய போது அந்த மாணவி தீபீகா நிலை தடுமாறி தான் விழுந்தாரா? அல்லது வேறு ஏதும் பிரச்சனையா? என்று பலவிதமான கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.