சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அமெரிக்க பெண் ஒருவரின் வயதை கேட்டு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்..
கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த அலிகா வாஸ்க்யுஸ் சமீபத்தில் தன்னுடைய 40 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயது குறித்து பதிவிட்டதும், அதனை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
20 வயதுகளில் இருக்கும் பெண்களை விட நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என ஒரு ஆண் தன்னிடம் கூறியதாக அலிகா கூறியுள்ளார்.
யோகா ஆசிரியையாக பணிபுரிந்து வரும் அலிகா இதுகுறித்து பேசுகையில், சராசரியாக 40 வயதில் இருக்கும் பெண்களை போல் நான் இல்லை.
என்னுடைய வயது மற்றும் புகைப்படத்தை பதிவிடுவதின் மூலம் பல பெண்களுக்கு ஊக்கம் கொடுப்பதை போல உணர்கிறேன்.
அதனை ஏற்று பெண்களும், நான் ஊக்கமூட்டுவதாக பதிலளித்துள்ளனர் என கூறியுள்ளார்.
அலிகா அவருடைய 16 வயதிலே கர்பமடைந்துள்ளார். அவருடைய இரண்டு மகள்களும் 20 வயதிலே கர்பமடைந்தனர் என கூறியுள்ளார்.






