நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய அமைச்சர் ரிசாத் பதியூதின் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இலங்கையில் தலைதூக்கியுள்ள இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் பல முஸ்லிம் அமைச்சர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் ரிசாத் பதியூதீன் ஓமானுக்கு சென்றுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ரிசாத்தின் வெளிநாட்டு பயணம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.