அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவரை கல்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்பிட்டி, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.