சின்னத்தம்பி’ சீரியலில் நடிக்கும் பிரஜனின் மனைவி இரட்டை குழந்தை பிறந்தது..

சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர்.  அந்த வகையில் பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலில் நடிக்கும் பிரஜனின் மனைவி ஆவார்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாண்ட்ரா தனது பயணத்தை மலையாள படங்களில் குழந்தை நட்சித்திரமாக நடித்து தொடங்கினார். மேலும் , தமிழில் 2000 ஆண்டு விஜய் நடித்த “கண்ணுக்குள்  நிலவு ” என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.  போராளி, 6 மெழுகுவத்திகள் என 10 திற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.

பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமான ப்ரஜின்கடந்த ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டிவி பக்கம் வந்தார்.

இவரது கணவரான பிரஜின். விஜய் டிவி  சீரியல் ஹீரோவாக அவர் ரீ எண்ட்ரி கொடுத்த  ‘சின்னத்தம்பி’ தொடருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட சீரியல்களில் சின்னத்தம்பியும் ஒன்று. இது பிரஜினுக்கு நிறைய விருதுகளைப் பெற்றுத் தந்தது.

அதே போல சான்றாவும் சீரியலில் நடித்து வந்தார். ஆனால், கற்பமானதால் சீரியலில் நடிப்பதை நிறுத்தினார் சான்றா. இந்த நிலையில் 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் தவித்து வந்த இவர்களுக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது.