உடல் சூட்டினால் இத்தனை பிரச்சினையா!

உடல் சூடு என்பது இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினையாகும். வாத உடம்பு உள்ளவர்களை இந்த பிரச்சினை அதிகமாக தாக்கக்கூடியதாகும். இதனை ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நமது உடலை பல்வேறு நோய்கள் தாக்கிவிடும்.

இதில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்தால், வாய்ப்புண், நாக்குப்புண், வயிற்றில் கட்டிகள் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.
இந்த உடல் சூட்டை போக்க சித்த மருத்துவத்தில் நிறைய வழிமுறைகள் உள்ளன.

உங்களது உடலுக்கு ஏற்ப மருத்துவ முறையை நீங்கள் பயன்படுத்தி பலன் பெறலாம். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

  • வாரத்தில் ஒருமுறையாவது நல்லெண்ணெய்யை தேய்த்து குளியல் எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடையும். உடலில் வெப்பநிலை சமமாகும்.
  • உறங்கும் போது உள்ளங்கால்களில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு உறங்கலாம். இதனால் உடலில் உள்ள அதிக வெப்பம் நீக்கப்பட்டு, உடலின் வெப்பநிலை சமமாகும்.
  • காலிஃபிளவர் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.
  • முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தாலும் உடல் சூடு தணியும்