லக்ஷ்மி அகர்வால் என்பவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருக்கிறார், பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. லக்ஷ்மி அகர்வால் என்பவர் ஒரு நபரால் ஆசிட் தாக்குதலுக்கு ஆளானவர். மிகுந்த எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் தீபிகா படுகோனே.
இந்நிலையில் இதேபோன்ற ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் மலையாள உலகின் முன்னணி நடிகையான பார்வதி.
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்வதி நடித்துள்ள உயரே படத்தில் தான் அவருக்கு இப்படியொரு கதாபாத்திரம். வருகிற 26ஆம் தேதி வெளியாக இப்படத்தில் டொவினோ தாமஸ், ஆசிப் அலி இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். பல்லவி ரவீந்திரன் என்கிற பைலட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்வதி.