பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இஸ்லாம்கோட் நகரில் இருந்து கராச்சி நோக்கி ஒரு சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. இன்று காலை படின் என்னுமிடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சுமார் 10 பேர் நிலைமை மோசமாக உள்ளதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் சுமார் 9 ஆயிரம் சாலை விபத்துகளில் சுமார் 5 ஆயிரம் பேர் பலியாவது தொடர்கதையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.